பெட்ரோல்-டீசல் விலை இனி தினசரி மாற்றம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.12 ரூபாயும், டீசல் 1.24 ரூபாயாக (june 15) நேற்று குறைக்கப்பட்டது.பெட்ரோல்-டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த மத்திய அரசின் செயல் நேற்று கடைசியாக நிர்ணயித்து வெளியிட்டது. இது, கடந்த இரண்டு வாரங்களுக்கு மட்டுமே, அதன் பிறகு, விலை நிர்ணயிக்கும் விகிதத்தில் தினசரி திருத்தம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

Petrol-price-cut-by-Rs-377-per-litre-and-diesel-by-Rs-291_SECVPF

தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது.உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் நிகழும் மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, நாடு முழுவதும் பெட்ரோல் – டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிவந்தன.

புதுச்சேரி, விசாகப்பட்டினம், சண்டிகர், உதைப்பூர் மற்றும் ஜாம்ஜெட்பூர் ஆகிய நகரங்களில் கடந்த மே ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் சோதனை அடிப்படையில்அமல்படுத்தப்படும் என்று (IOC) அறிவித்தது, அதை மத்திய அரசு அமல்படுத்தியது.இதையடுத்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் ஜூன் 16-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

petroll-kqDG--621x414@LiveMint

இன்று முதல், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச நாடுகளில் எப்படி தினசரி மாற்றத்திற்கு உள்ளாகிறதோ அதை நடைமுறைப்படுத்தி இருக்கின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். பின்னர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டு, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த விலை மாற்றம் பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ-மெயில், மொபைல் ஆப்ஸ் மற்றும் வெப் போர்டல் ஆகியவற்றின் மூலம் தெரியப்படுத்தப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயிள் நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top