வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீக்கக் கோரி 15 தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கடிதம்

vikki

 

வட மாகாண அமைச்சர்களில் இருவரை ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக உத்தரவிட்டு, ஏனைய இருவருக்கும் எதிராக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்ய தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த முடிவையடுத்து அவரை பதவி நீக்கம் கோரும் கடிதத்தை புதன் இரவு அவசர அவசரமாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் அந்தக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் உட்பட 18 பேர் கையெழுத்திட்டு கையளித்துள்ளனர்.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து 4 பேரையும் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கைக்கு தமிழரசுக்கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

இதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய முதலமைச்சராக அவைத்தலைவர் சி. வி.கே.சிவஞானம் நியமிக்கப்பட யுள்ளார்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top