செல்லப் பிராணிகளின் உடலில் மைக்ரோசிப் வைத்து இனி விற்க வேண்டும்;மத்தியஅரசு ஆணை

 

 

pet

 

சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது.இதை எதிர்த்து பல மாநிலங்கள் சட்டசபையில் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தன

மேகாலயாவில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பல பேர் அந்த கட்சியிலிருந்து மாட்டிறைச்சிக்கான தடை காரணமாக விலகிவிட்டனர்.பாஜக வின் மக்கள் விரோத கொள்கை காரணமாக நாட்டில் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.இந்தியாவின் பன்முகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுகொண்டிருக்கிறது

இந்த சூழலில் மே மாதம் வந்த மற்றொரு அறிவிப்பு நம் கவனத்திற்கு வராமல் போய்விட்டது. அந்த  புதிய அறிவிப்பு இப்போது சர்ச்சையை உண்டுபண்ணி இருக்கிறது. அதாவது ‘பெட் விலங்குகள்’-செல்லப் பிராணிகள்  விற்பனையில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது.விலங்குகள் விற்பனையில் கட்டுப்பாடும், ,தொழில் நுட்பமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது.ஒவ்வொரு பெட் விலங்குகளின்-செல்லப் பிராணிகளின்  உடலில் மைக்ரோசிப் பொருத்தி அதன் விற்பனையை கண்காணிப்பது. என்பதே அது!

புதிய விதிகளின் கீழ், செல்லப்பிராணிகள்,குட்டிகள், இனி ஒரு ‘பெட் கடைக்கு’ சென்று வாங்கப்படக்கூடாது, ஆனால் ஒரு பதிவு பெற்ற வளர்ப்பாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் பெற முடியும்.அதாவது ஒரு பதிவு செய்யப்பட பிராணி வளர்ப்பாளரிடம் உள்ள பெட்-செல்ல விலங்குகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு அதன் உண்மையான வயது, அதன் நோய் தடுப்பூசி பற்றிய விபரம் என கணக்கிடப்பட்டு பிராணி வளர்ப்பாளரும் சேர்த்தே மாநில விலங்கு நல வாரியத்தால் (SAWB) கண்காணிக்கப்படுவார்கள்.

 

pet4

இனப்பெருக்கம் செய்வதற்கு எட்டு வாரங்கள் குறைவாக இருக்கும் நாய்களை விற்க அனுமதிக்கப்படவில்லை, மேலும் ஆறு மாதங்களுக்கு மேலான நாய்கள் மற்றொரு உரிமம் பெற்ற இனப்பெருக்கம் செய்யாமல், ஸ்டெர்லைலிங் இல்லாமல் விற்பனை செய்ய முடியாது.என புதிய விதிகள் கொண்டுவந்து செல்லப் பிராணிகள் விற்பனை சந்தையை எளிய மக்களிடம் இருந்தும் உதிரியான சின்ன சின்ன வியாபாரிகளிடம் இருந்து பிடுங்கி பெரிய பெரிய வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்க பாஜக அரசு திட்டமிட்டு இருக்கிறது  இந்த செல்லப் பிராணிகளின் விற்பனை சந்தையை  2006 ஆம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால் பெரும் வளர்ச்சி பெற்று இருப்பது தெரிய வருகிறது

pet kurgo

2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் 7 மில்லியனுக்கும் அதிகமான செல்லப் பிராணிகள் தத்தெடுப்போர் 2011 ஆம் ஆண்டில் 10 மில்லியனாக வளர்ந்துள்ளனர். சராசரியாக 600,000 செல்லப்பிராணிகள் ஒவ்வொரு ஆண்டும் தத்தெடுக்கப்பட்டிருக்கிறது  ‘எரோமோனியோடர் இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் ‘’இந்தியாவில் செல்லப் பிராணிகளின்  சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, உலகளவில் இந்தியா ஒரு முக்கியமான இடத்தில் இருக்கிறது செல்லப்பிராணிகளை வளர்ப்போர் பெருகிவரும் சூழலில் செல்லப் பிராணிகளுக்கான உணவு ,மருந்து, சுகாதாரப் பொருட்கள் உலகளவில் முக்கிய சந்தையாக கருதப்படுகிறது’’ என்கிறது.    இந்திய செல்லப் பிராணிகள்  விற்பனை சந்தையில் இப்போது 800 மில்லியன் டாலராக  விற்பனை உள்ளது, மற்றும் வரும் ஆண்டுகளில் இந்த விற்பனை வலுவான சில்லறை விற்பனை மதிப்பு பெருகும் என  எதிர்பார்க்கப்படுகிறது  கோல்ட்மேன் சாக்ஸின் கருத்துப்படி, அமெரிக்க டாலர்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2007 ஆம் ஆண்டு முதல் 2020 வரை இருமடங்காக இருக்கும், மேலும் 2043 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என கூறுகிறது  2012 ஆம் ஆண்டு மட்டும் செல்லப்பிராணி பராமரிப்புடன், செல்லப்பிராணிகளின் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத் தேவைகள்  24 சதவிகிதம் வளர்ச்சியடைந்து இருந்தன  . இந்தியாவில் பெட் உணவு அதிகரித்து வருகிறது. பிரீமியம் உணவு பிராண்டுகள் நகர்ப்புறங்களில் புகழ் பெற்று வருகின்றன  நாட்டில் செல்லப்பிராணிகளைப் பற்றி உணர்திறன் கொண்ட பொதுவான சூழல் காரணமாக, இந்திய நுகர்வோர் தங்கள் செல்லப்பிராணிகளை மனிதாபிமானத்திற்குக் கொண்டு வந்துள்ளனர், மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு அவசியமாகவோ  அல்லது அதிகமாகவோ செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்    ஒவ்வொரு ஆண்டும், குழந்தை இல்லாத இளம் தம்பதியர் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன் குடும்ப வாழ்க்கையை உருவகப்படுத்துவதற்கான ஒரு கருவியாக  செல்லப் பிராணிகளை வளர்க்கின்றனர் 2016 ஆம் ஆண்டில் நாய் மற்றும் பூனை உணவுக்கான முன்னறிவிப்பு விற்பனை     $ 102.89 மில்லியன் டாலராக திட்டமிடப்பட்டது. ஆனால் அதை தாண்டி விற்பனை நடந்தது என்பதுதான் உண்மை

pet fair asia

 

மத்திய அரசு செல்லப்பிராணிகள் விற்பனையில் இவ்வளவு அக்கறைகொள்வது ஏன்?விற்பனையை ஒழுங்கு படுத்துவது ஏன்.? சோழியன் குடும்மி சும்மா ஆடுமா! அதுதான்,பல மில்லியன் டாலர் விற்பனை உள்ள பிராணிகளின் சந்தையை ஒழுங்கு படுத்தி ஒட்டுமொத்தமாக பெரிய வியாபாரிகளிடம் ஒப்படைப்பது. பிராணிகளின் உணவு சந்தையை அமெரிக்க பெரும் கம்பனிகளுக்கு திறந்து விடுவது. நாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் வதைக்கிறோம் என்று உயர்நீதி மன்றம் வரை சென்ற பீட்டா போன்ற விலங்கு நல அமைப்புகள் இப்போது பிராணிகளுக்கு உடலில் மைக்ரோசிப் வைப்பதை எதிர்க்குமா? இல்லை பாஜக அரசுக்கு அடிபணியுமா?பொறுத்து இருந்து பார்ப்போம்!

 

சேவற்கொடியோன்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top