யானைக்கவுனி பாலம் பராமரிப்புக்காக மூடல்: வடசென்னை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

யானைக்கவுனி கண்ணப்ப திடலில் மேம்பாலம் உள்ளது. பராமரிப்பு பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலம் மூடப்பட்டது.

இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் வழியாக திருப்பி விடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பேசின் பிரிட்ஜ் பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

இப்போது யானைக் கவுனி மேம்பாலம் செல்லும் வாகனங்களும் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

தங்க சாலையில் இருந்து பேசின் பிரிட்ஜ்க்கு செல்ல ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே சுமார் 1 மணி நேரம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மேம்பால பராமரிப்பு பணியை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top