வங்காளதேசத்தில் கடும் நிலச்சரிவு – 25 பேர் மண்ணில் புதைந்து பலி

வங்காளதேசத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்காள தேசத்தின் பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. கனமழை காரணமாக ரங்கமாதி மற்றும் பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி ரங்கமாதியில் 10 பேரும், பந்தர்பான் மற்றும் சிட்டகாங்கில் 15 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் கனிசமான பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top