பா.ஜ.க. அரசு 3 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை: திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

thirunavukarasu

இந்திய அளவில் வரலாறு தெரியாத கட்சி பா.ஜ.க. ஆகும். தேசக்கொள்கை உள்ள மகாத்மா காந்தியை வியாபாரி என்று அமித்ஷா கூறியதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் கூடிய இடத்தில் அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று அழுத்தம் தருவதற்காக அமைச்சர் ராஜினாமா மிரட்டல் விடுத்திருக்கலாம்.

அ.தி.மு.க. தற்போது 3 கோஷ்டியாக உள்ளது. இந்த கட்சியை உடைப்பதற்கு பா.ஜ.க. தான் காரணம். இணைவதற்கும் பா.ஜ.க. தான் காரணமாக இருக்கப்போகிறது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். இந்த எண்ணிக்கை குறைந்தால் ஆட்சியை இழக்க நேரிடும்.

பா.ஜ.க. அரசு கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு துப்பாக்கி குண்டுகளை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top