பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

aadhar

 

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வருமான வரி செலுத்துவது மற்றும் பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். அதன்படி இன்று தீர்ப்பு அளித்த நீதிபதிகள், ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் மத்திய அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தனர். அத்துடன், ஆதார் தனி மனிதனின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானதா? என்பதை அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆதார் என்பது கட்டாயம் ஏற்புடையது அல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், இன்றைய உத்தரவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top