சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்

assvin

 

 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இலங்கையை இன்று எதிர் கொள்கிறது. லண்டன் ஒவல் மைதானத்தில் பிற்பகலில் இந்தப் போட்டி தொடங்குகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்றது போல் இலங்கையையும் வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் 1’ சுழற்பந்து வீரரான அஸ்வின் இடம் பெறவில்லை. 11 பேர் கொண்ட அணியில் இருந்து அவர் கழற்றி விடப்பட்டார்.அஸ்வின் நீக்கம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா அவர் இடத்தில் இடம் பெற்று முத்திரை பதித்தார். அஸ்வினை விட ஜடேஜா மேலானவர் என்ற அடிப்படையில் ஜடேஜா சேர்க்கப்பட்டு அஸ்வின் நீக்கப்பட்டார்.

இலங்கைக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்திலும் அவர் இடம் பெறுவாரா? என்பதில் உறுதியாக தெரியவில்லை.

இந்த நிலையில் இன்றைய ஆட்டம் குறித்து விவரித்த கேப்டன் வீராட்கோலி, அஸ்வின் பற்றி கூறியதாவது:-

அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீரர். ஒவ்வொருவருக்கும் அவரை பற்றி நன்றாக தெரியும். தொழில் ரீதியிலான வீரர்களில் சிறந்தவர். கடந்த போட்டியில் நீக்கப்பட்ட அவர் அணி நிர்வாகத்தின் முடிவை புரிந்து கொள்வார். இதனால் அவர் எந்த கருத்து வேறுபாடுடன் இல்லை.முற்றிலும் நன்றாக இருக்கிறார்.

அணி தேர்வு தொடர்பாக நீங்கள் விரும்பிய முடிவை எடுக்க உங்களுக்கு ஆதரவு அளிப்பேன் என்று அஸ்வின் என்னிடம் தெரிவித்து இருந்தார்.முகமது ‌ஷமி ஒருநாள் ஆட்டத்தில் விளையாடி நீண்ட நாட்கள் ஆகிறது. அவரும் அணியின் சொத்தாக நிச்சயமாக இருப்பார்.ஹர்த்திக் பாண்ட்யா உண்மையிலேயே இந்திய அணியின் சொத்தாக இருக்கிறார். பேட்டிங், பந்து வீச்சில் முத்திரை பதிக்கிறார்.

நாங்கள் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கவில்லை. எல்லா அணிகளும் எதிராகவும் ஒரே மாதிரியாக ஆடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top