பெட்ரோல் விலை 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம்: மத்திய அரசு

petrol

 

 

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை வரும் 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.அதன்படி புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய 5 நகரங்களில் சோதனை முயற்சியாக பெட்ரோல்-டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை நாடு முழுவதும் வருகிற 16-ந்தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் டீசல் விலை நிர்ணயம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.இந்த 5 நகரங்களிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய 3 எண்ணை நிறுவனங்கள் தினமும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

இந்த 5 நகரங்கள் தவிர மற்ற இடங்களில் பெட்ரோல்- டீசல் விலையை மாதத்திற்கு 2 முறை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றது.

இதன்மூலம் 16-ந்தேதி முதல் பெட்ரோல் விலை தினமும் நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top