விஜய் – அட்லீ’ பட அப்டேட்: யோகி பாபு ஒப்பந்தம்

 

 

yoki

 

 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார்.

‘பைரவா’ படத்துக்குப் பிறகு விஜய் நடித்து வரும் படத்துக்கு ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைக்க, அட்லீ கதை – வசனம் எழுதி இயக்குகிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, உள்ளிட்ட பலர் இப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேஜிக் நிபுணராக விஜய் நடித்துள்ளார். அது மிகவும் சிறிய பகுதி தான் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது. ஆகஸ்ட் மாதம் இசை வெளியீட்டு விழாவும், அக்டோபர் மாதம் படமும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்திய படங்களில் சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கும் யோகி பாபுவுக்கு விஜய்- அட்லீ படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் மூலம் யோகி பாபுவின் கிராஃப் இன்னும் உயரும் என்று சொல்லப்படுகிறது.

அட்லீ படத்தை முடித்தவுடன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் என்பது கவனிக்கத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top