போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு

po1

 

“தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை’’ என்று சுதந்திர போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் கூறினார்கள்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவு நாளை  மே மாதம் கடைசி ஞாயிறு அன்று மே பதினேழு இயக்கம் மெரினா-தமிழர் கடலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்துவது கடந்த  ஆறு ஆண்டாக நடத்தி வருகிறது.இந்த வருடம் நினைவேந்த  வந்தவர்களை தமிழக போலிஸ் மத்திய அரசின் நிர்பந்தத்தில் கைது செய்து இருக்கிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  தோழர் திருமுருகன்,தமிழர் விடியல் கட்சியின் தலைவர் டைசன், செயலாளர் இளமாறன்,  மற்றும் அருண் ஆகிய நால்வரை குண்டர் சட்டத்தில் போட்டது

po3

குண்டர் சட்டத்திலிருந்து உடனே அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மாட்டிறைச்சி தடையைக் கண்டித்தும் தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (6-6-2017) அன்று நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் நல்லக்கண்ணு தலைமை தாங்கி பேசினார். தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தோழர் மு.வீரபாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top