தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது

TAMIZAKAM
தமிழக சட்டப்பேரவை வரும் 14ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை பொறுப்பு செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் வருகிற 14-ந்தேதி கூட்டப்பட உள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த கூட்டத்தொடரில் துறை வாரியான மானியக்கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளதால் குறைந்த பட்சம் 25 முதல் 30 நாட் கள் வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு மசோதா, ஜி.எஸ்.டி. வரி மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட உள்ளது. தற்போதைய அரசியல் பரபரப்பில் டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம். எல்.ஏ.க்கள் சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள் வார்கள்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகளில் எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் விதம் சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தும் என தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top