இந்திய கிரிகெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக்கை விண்ணப்பிக்கச் சொன்னது விராட் கோலியாமே

 

 

virat

 

 

இந்திய கிரிகெட் அணியின்  பயிற்சியாளர் பதவிக்கு சேவாக்கை விண்ணப்பிக்கச் சொன்னது விராட் கோலி தான் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிகெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய பயிற்சியாளர்
பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.  பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்.

இந்தப் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், விண்ணப்பித்து இருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் ரிச்சர்ட் பைபஸ், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ், இந்திய ஏ அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், விராட் கோலி வேண்டுகோளின் படியே சேவாக்,  பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டியின் போது இதை சேவாக்கிடம்

கோலி சொன்னதாகவும் முதலில் யோசித்த சேவாக், பின்னர் சம்மதித்ததாகவும் கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top