பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

 

 

opan

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோரும் மகளிர் பிரிவில் கார்பைன் முகுருசா, கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச், 77-ம் நிலை வீரரான ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸூடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 45-ம் நிலை வீரரான பிரான்சின் பெனோயிட் பேரை எதிர்கொண்டார். இதில் நடால் 6-1, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேக் சாக் 5-7, 5-7, 3-6 என்ற நேர் செட்டில் 57-ம் நிலை வீரராக செக் குடியரசின் ஜெர்ரி வெஸ்லியிடம் தோல்வியடைந்தார்.

5-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 38-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சியஸை வீழ்த்தினார். 17-ம் நிலை வீரரான ஸ்பெயின் ரோபர்டோ பவுதிஸ்டா அகுட் 6-2, 2-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் 142-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை தோற்கடித்தார். 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் லவித்யாவின் எர்னஸ்ட் குல்பிஸை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-2, 6-4 என்ற நேர் செட்டில், 78-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனை வீழ்த்தினார்.

11-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜெய்மி போர்லிஸை தோற்கடித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top