மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு உருவாகும்: பழ.நெடுமாறன் கருத்து

nedummaaran

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் மதுக்கடை ஆகிய விவகாரங்களில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்றதைப் போல, மத்திய அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் ஒருங்கிணைந்த போராட்டம் உருவாகும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது, இந்தியைத் திணிப்பதைக் கண் டித்து நாளை திருச்சியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தரை பரிந்துரை செய்யும் குழுத் தலை வரை, தமிழக ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார்.

தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தனது விருப்பம்போல செயல்பட முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் காலூன்ற பாஜக முயல்கிறது. ஆனால், மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழகத்தில் பொதுப் பிரச்சினைகளுக்குக்கூட கட்சிகள் ஒன்றிணைந்து போராடாமல், கட்சி ஆதாயத்தையே பார்க்கின்றன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, டாஸ் மாக் மதுக்கடை ஆகிய விவகாரங்களில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்றதைப்போல, மத்திய அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் ஒருங்கிணைந்த போராட்டம் உருவாகும் என்றார் நெடுமாறன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top