நினைவேந்தல் நடத்தியதால் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சி டைசன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்

ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சென்னை மெரீனா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் மே   மாதம் மூன்றாவது ஞாயிற்று கிழமை  நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வை அறிவித்திருந்தார் திருமுருகன் ஆனால் போலீசார் அதற்கு தடை விதித்தனர். தடையை மீறி நினைவேந்தல் நடத்தியதற்காக.  திருமுருகன் தமிழர் விடியல் கட்சியின் டைசன்  உள்ளிட்டவர்களை  பொய் வழக்கில்  புழல் சிறையில்    அடைக்கப்பட்டனர்.

அதில் திருமுருகன், இளமாறன், டைசன், அருண், என நால்வர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இது  மத்தியில் ஆளும் மோடி அரசின் அழுத்தங்களுக்கு பணிந்தே எடப்பாடி பழனிசாமி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top