பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

payirchi

 

நியூசிலாந்து ‌அணியுடனான சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சியாட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

லண்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லியூக் ராங்கி 66 ரன்களும், ஜிம்மி நிஷம் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும் எடுத்தனர். முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. கேப்டன் விராட் கோலி 52 ரன்களுடனும், தோனி 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்தார். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top