பாலில் கலப்படம் விவகாரம்; அமைச்சருக்கு பால்முகவர்கள் சங்க தலைவர் சவால்

 

chalange

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலில் கலப்படம் தொடர்பான தங்களின் கருத்துக்களிலும், தங்களின் செயல்பாடுகளிலும் தான் நாங்கள் மாறுபட்டு நிற்கிறோமே தவிர கலப்பட பாலை தடுத்து, பொதுமக்களுக்கு தரமான பாலினை விநியோகம் செய்வதில் பால் முகவர்களாகிய நாங்கள் தங்களை விட மிக உறுதியாகவே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டவர்களாகிறோம்.
பால்வளத்துறை அமைச்சரான நீங்கள் “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” என பொத்தாம் பொதுவாக பேசியிருக்கின்ற காரணத்தால் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பால் முகவர்களாகிய எங்களால் உரிய பதிலை கூற முடியவில்லை. காரணம் ஆதாரமற்ற தகவல் அடிப்படையில் எந்த நிறுவனம் பாலில் கலப்படம் செய்கின்றது என தெரியாமல் அவற்றை எப்படி எங்களால் புறக்கணிக்க முடியும்?

எங்களது சங்கம் ஏதாவது ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கு ஆதரவாக இதுவரை செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் நான் எனது சொந்த பால் வணிகத்தை விட்டும், இந்த சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் என்கிற முறையில் எங்களது சங்கத்தின் தலைமை பொறுப்புகளில் இருந்து விலகி, பொது வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிட தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சவால் அல்ல. இந்த உலகில் பிறந்தோம்.. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல்… பொதுமக்கள் நலன் சார்ந்த பயணத்தில் முக்கியமான தருணத்தில் நாங்கள் எடுக்கும் முக்கியமான முடிவு இது.நாம் பிறப்பதும் ஒரு முறை, வாழ்வதும் ஒரு முறை, வாழும் வரை நமது வாழ்க்கை பிறருக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top