ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு, ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பை நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு, ரெஸ்டாரண்ட் மற்றும் உணவு விடுதி உரிமையாளர்களை வெகுவாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் புதிய திருத்தம் தேவை எனக் கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். வரும் 30ம் தேதியன்று இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இரண்டு மாநிலங்களிலும் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ரெஸ்டாரண்ட், பேக்கரிகள், ஓட்டல்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளன. இதனால், அன்றைய நாளில் சுமார் ரூ.500 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top