வாஷிங்டன் பந்துவீச்சு: அஷ்வின் ஹேப்பி

 

aswin

 

ஐபில் கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசினார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறினார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டு சென்றுவிட்டது.

முன்னதாக விழா ஒன்றில் பேசிய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஐபில் போட்டியில் புனே அணிக்காக தனக்குப் பதிலாக ஆடிய தமிழத்தைச் சேர்ந்த ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை புகழ்ந்தார்.

இதுபற்றி அஷ்வின் கூறும்போது,’ சுந்தர் சிறப்பாகப் பந்துவீசுகிறார். தமிழ்நாடு கிரிக்கெட் லீக்கில் அவரது ஆட்டத்தை குறைவாகத்தான் பார்த்தேன். ஆனால், ஐபிஎல்-லில் சிறப்பாக ஆடியிருக்கிறார். 20 ஓவர் போட்டிகளில் எப்படி பந்துவீசவேண்டும் என்பது அவருக்குத் தெரிகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் புதிய பந்தில் பந்துவீசுவது சவாலானது. அதை சுந்தர் அருமையாகச் செய்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top