பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் : சட்டம் நிறைவேற்றியது கேரள அரசு

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மலையாளத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற மலையாள மொழி (கற்றல்) மசோத கேரளா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

bldg3

தாய்மொழி வழியில் மாணவன் பாடங்களை கற்கும் போது அதை நன்கு புரிந்துகொள்ளும் விதத்தில் இருப்பதோடு, தாய் மொழி வளரவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் தற்காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் முதல்பாடமாக இருக்க வேண்டிய தாய்மொழிக்கு பதிலாக ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகள் கற்றுத்தரப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில் கேரளாவில், அதன் தாய் மொழியான மலையாளத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் கற்பிக்க வேண்டும். அப்படி கற்பிக்கத் தவறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அவசர சட்டம் இயற்றியது.

இந்தநிலையில் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை மலையாளத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற மலையாள மொழி (கற்றல்) மசோத கேரளா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கேரள பள்ளிகளில் மலையாளம் மொழியில் கற்பித்தல் கட்டாயமாக்க்லப்பட்டுள்ளது.

இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டால் நம் தமிழ் மொழி சிறப்புறும் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறிவருகிறனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top