லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து 30 பேர் பலி

akathikal

 

அதிக சுமை காரணமாக அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் வறுமை மற்றும் போர் காரணமாக அங்கிருக்கும் மக்கள் மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதற்காக, அவர்கள் கடல் வழியாக, ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால் அடிக்கடி பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.

இந்நிலையில், லிபியாவில் இருந்து இத்தாலிக்குப் புறப்பட்டு சென்ற அகதிகள் படகு ஒன்று சுமார் 500 முதல் 700 பேரை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்தப் படகு லிபியாவிலிருந்து புறப்பட்டு 20 மைல் தூரம் சென்றபோது அதிக சுமை காரணமாக, ஒரு பக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சுமார் 200 பேர் கடலில் விழுந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த மீட்புப்படையினர் கடலில் விழுந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1,300 அகதிகள் கடலில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top