42 ஆம் நாள் நெடுவாசல் போராட்டம். திருமா, வேல்முருகன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாடு முழுவதிலும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

41-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் கலந்து கொண்டார்.

மேலும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக  முழக்கமிட்டனர்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top