ஓ.பி.எஸ். மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்; தினகரன்அணி வற்புறுத்தல்

 

o-panneerselvam

தஞ்சை ரெயில் நிலையம் அருகில் தினகரன் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்ட போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்ட முடிவில் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் எனக்கூறுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தோற்கும் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். இதன் மூலம் அ.தி.மு.க. வில் அவர் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.

அ.தி.மு.க.வின் 6 ஆண்டுகால ஆட்சியை இருண்ட காலம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஓ.பன்னீர்செல்வம் இந்த அரசை கையாலாகாத அரசு என்கிறார். இருவரும் ஒன்று சேர்ந்து ஒரே கருத்தைக் கூறுகின்றனர். பட்டத்து யானையின் பயணத்தை தடை செய்யப்பார்க்கின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் மீது ஆட்சியில் இருந்தபோது நிகழ்ந்த முறைகேடு, சேர்த்த சொத்து தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிச்சாமியை நாங்கள் சந்திக்கும் போது இந்த கருத்தை வலியுறுத்துவோம். தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் இதை வெளிக்கொணருவோம்.

எங்களிடம் 122 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். இனி ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை கிடையாது. எந்த இணைப்பும் வேண்டாம். அவர்கள் தினமும் ஒரு கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், முதல்-அமைச்சரை சந்தித்தது அன்றாட நடவடிக்கை தான். அ.தி.மு.க. தலைமையோடு தான் பயணிக்க வேண்டும். தலைமை இல்லை என்றால் ஆபத்தாக முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top