அமித்ஷாவை கலாய்த சீமான்

ரஜினிக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றனர் என்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறிய கருத்தை சீமான் கலாய்த்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த சந்திப்பு விழாவில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவும் ஏதிர்ப்பும் நிலவிவருகிறது.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா,”ரஜினிக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றனர் “என்று கூறினார். இந்த கருத்து குறித்து நாம் தமிழர் கட்சியின் ஓருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு சீமான் பதிலளிக்கும் போது, ” ரஜினிகாக கதவ ரொம்ப நேரம் திறந்து வைக்காதீங்க அப்புறம் வேற யாராவது உள்ள வந்துட போராங்க” என்று கிண்டாலாக கூறியுள்ளார். ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதை சீமான் தொடர்ந்து கடுமையாக ஏதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் கடுமையாக சாடியுள்ளார். “கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீர் விடமாட்டாங்க, நாங்க மட்டும் கர்நாடக காரர முதல்வராக வர விட்டுருவோமா? ” என்று சீமான் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top