தேச துரோக வழக்கில் வைகோவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

 

vaiko_

 

2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது மாநில அரசு பொய்யாக  தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விரைவாக முடிக்காமல் நீதிமன்றமும் மாநில அரசுக்கு துணை போனதாக சொல்லப்பட்டது.இதை அம்பலப்படுத்த  இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதி, எழும்பூர் நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டும் என்று தானாக முன் வந்து வைகோ மனு செய்தார் வைகோ. ஜாமீனை மறுத்து சிறை சென்றதன் மூலம் அரசால் தாம் பலிவாங்கப்பட்டதையும், நீதித்துறை அதற்கு துணையாக வழக்கை நீடித்துக்கொண்டிருப்பதையும் பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இந்த சூழலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வைகோவின் ஜாமீன் மனு இன்று 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் வைகோவை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.

வைகோ தரப்பு வழக்கறிஞரும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புருஷோத்தமன் வைகோவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top