ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வாக்குகளை பெற அதிமுகவை குழப்புகிறது பாஜக: திருநாவுக்கரசர்

 

thirunaa

 

குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக உறுப்பினர்களின் வாக்குகளையும் பெறுவதற்காகவே இரு அணிகளுக்கு இடையே மத்திய பாஜக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே தமிழக அரசு செயல்பாடு இல்லாமல் இருக்கிறது, தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை மத்திய பாஜக அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

குடியரசு தலைவர் தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி அணியிடம் 50 ஆயிரம் வாக்குகளும் பன்னீர்செல்வம் அணியிடம் 10 ஆயிரம் வாக்குகளும் உள்ளன.இந்த வாக்குகள் முழுவதையும் தங்கள் வசம் எடுப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் மோடி மாறி மாறி சந்தித்து வருகிறார்,

முழுக்க பாஜகவால் இயக்கப்படும் ஒரு ஆட்சியாக தமிழக அரசு மாறிவிட்டது, எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை எந்த அதிகாரமும் இல்லாத ஒரு முதல்வராக இருக்கிறார் தவறு செய்யும் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையையும் அவரால் எடுக்க முடியாது, இப்படி இருக்கும் போது எப்படி அவரால் நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியும் ? தமிழகத்தை இருளில் தள்ளும் ஒரு ஆட்சி பாஜகவால் நடந்து வருகிறது” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top