ஒரே நாளில் 81 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்து; மதுரை உயர் நீதிமன்றம்

ஒரே நாளில் 81 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவர்களை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதி மன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கோடை விடுமுறை கால நீதிமன்றத்துடன் இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பு நீதி மன்றமும் நடைபெறுகிறது. சிறப்பு நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

நீதிபதிகள், வழக்கறிஞர்களின் விருப்பத்தின் பேரில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் பட்டியலிடப் படுகின்றன.

madura

 

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த் திகேயன் தலைமையில் சிறப்பு நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.

இதில் மதுரை உட்பட 13 மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக்கோரி தாக்கலான 147 ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.

இதில், 81 வழக்குகளில் குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவுகள் ரத்து செய்யப் பட்டன. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சம்பந்தப் பட்டவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து முடிவெடுப்பதில் மாநில அறிவுரைக் குழுமம் தாமதம் செய்தது, மனதை செலுத்தாமல் சரியான காரணம் இல்லாமல் குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு பிறப்பித்தது ஆகிய காரணங்களுக்காக குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவுகளை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

மேலும் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லாதபட்சத்தில் அவர்களை விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட் டனர்.

9 வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களை விடுதலை செய்ய மாநில அறிவுரைக் குழுமம் ஏற்கெனவே உத்தரவிட்டதால் அந்த மனுக்களை முடித்து உத்தரவிட்டனர்.

மீதமுள்ள 57 மனுக்களில் பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவுக்கு எதிரான மனுக்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top