இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் காவல்துறை அடக்குமுறை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.

நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம்   சார்பாக    அழைப்பு விட்டிருந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியை  தமிழக காவல் துறை தடுக்க முயற்சி  செய்தது    நினைவேந்தலை   அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து   சிறையில் அடைத்துள்ளனர்.  தமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.

sdpi

 

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 8வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் மே17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை மாநகர காவல்துறை அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்ததோடு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் மீது கடுமையான அத்துமீறலை கையாண்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த தலைவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான அடக்குமுறையை காவல்துறை கையாண்டுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

சமீபகாலமாக தமிழக காவல்துறையின் அடக்குமுறை அதிகமாகிக்கொண்டே செல்கின்றது. டாஸ்மாக் மதுபானக்கடைக்கு எதிராக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், காவல்துறை அந்த உத்தரவினை மதிக்காமல் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பொதுமக்கள் மீது அத்துமீறலை கையாண்டு வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதும் தனது அடக்குமுறையை ஏவி வருகின்றது. அதோடு அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை ஒடுக்கி வருகின்றது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய அடக்குமுறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.  என தெரிவித்துள்ளார் 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top