ரஜினி ஒரு வியாபாரி- அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

rajini

 

 

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி என்றும், ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசுவார் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரையில் புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த அவர், எம்ஜிஆரை தவிர்த்து தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் நன்கு அறிவார். அவர் மிகவும் விவரமானவர். நல்ல வியாபாரி. எப்போதும் தனது கருத்தை மாற்றி மாற்றிப் பேசக் கூடியவர். எம்ஜிஆரைத் தவிர்த்து தமிழகத்தில் கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், விஜயகாந்த், டி.ராஜேந்தர் என அனைவருமே என்ன ஆனார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். மேலும், நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்துவிட்டார்கள். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை’ என்றார்.

கடந்த மாதம் வைகை அணையை தெர்மாகோல் மூலம் மூட முயற்சித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் செல்லூர் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top