2030-இல் பெட்ரோல், டீசல் கார்கள் காணாமல் போகும் – ஆய்வு தெரிவிக்கிறது

petrol

 

 

 

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும் என ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பொருளியல் வல்லுநரான டோனி செபா என்பவர், 2020 முதல் 2030-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து குறித்த மறுஆய்வு என்ற தலைப்பின் கீழ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

ஆய்வின் முடிவாக, 2030-இல் எரிசக்திப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் கருதியும், பெட்ரோல் பம்புகளைக் காண்பதே அரிதாகிவிடும் என்று கூறியுள்ளார். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாற்று ஏற்பாடாக, தானியங்கி எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்துக் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆடி, ஃபோக்ஸ்வேகன், மெர்சிடீஸ் பென்ஸ், வால்வோ போன்ற நிறுவனங்கள் தானியங்கி கார்களின் தொழில்நுட்பத்தில் ஏற்கனவே தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top