இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் இம்மாதம் விற்பனைக்கு வருகின்றது

 

apple

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் இம்மாதம் விற்பனைக்கு வருகின்றது.

பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இந்த ஐபோன்கள் வெளிவரும் என்று அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் தெரிவித்துள்ளது. ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ள மூன்றாவது நாடு இந்தியா. “முதலில் சிறிய அளவிலான ஐபோன் உற்பத்தியை பெங்களூரில் தொடங்கியுள்ளோம். ஐபோன் எஸ்.இ 4 இன்ச் மிகவும் சக்தி வாய்ந்த போன் ஆகும்.

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் இந்த ஐபோன்களுக்கான உதிரி பாகங்கள் ஐப்பான், சீனா உள்ளிட்ட 28 நாடுகளிலிருந்து வருகின்றது

இம்மாதத்திலிருந்து உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கான விற்பனையைத் தொடங்குகிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுவீச்சில் உற்பத்தியை பெருக்க உள்ளோம்” என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு பரவிவரும் 4ஜி பயன்பாடும் முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top