நாளை 7 ஆம் கட்டத்தேர்தல்: சோனியா, மோடி தொகுதிகளிலும் வாக்குப்பதிவு!

modi_sonia7ஆம் கட்டத் தேர்தல் நாளை (30ஆம் தேதி) 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதில், மோடி, சோனியா போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும்.

ஏழு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள்ஆகியவற்றில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தின் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும், ஆந்திராவில் 17, உத்தரபிரதேசத்தில் 14, பஞ்சாபில் 13, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

இதுமட்டுமின்றி, பிகாரில் 7 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டயூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிக்கும் நாளை  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 89 தொகுதிகளிலும் நேற்றுடன்  பிரசாரம் ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, நரேந்திர மோடி போட்டியிடும் இரு தொகுதிகளில் ஒன்றான வதோதரா, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா போட்டியிடும் ஸ்ரீநகர் ஆகிய தொகுதிகள் இதில் அடங்கியுள்ளன.

இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top