மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொச்சி மெட்ரோவில் பணியிடங்கள்

kochi_metro_700__large

 

கொச்சி மெட்ரோ ரயில் பணிகளில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கொச்சி மெட்ரோ ரயில்வேயின் நிர்வாக இயக்குநர் இலியாஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் பாலினத்தவர்களை மெட்ரோவில் பணியமர்த்தும் நடவடிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இலியாஸ் ஜார்ஜ், “ஹவுஸ்கீப்பிங், டிக்கட் கவுண்ட்டர் பணி, பார்க்கிங் மற்றும் தோட்டவேலை, ரயில்வே கேண்டீன் வேலைகளுக்கு விண்ணப்பித்திருத்த 41,000 நபர்களிலிருந்து, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் 530 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 530 பணியாளர்களில், 23 இடம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டடுள்ளது .

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ரயில்வே பணியாளர்கள், சமமாக மதிக்கப்படுவது உறுதி செய்யப்படும். அதிகமான கல்வித் தகுதி உடையவர்களுக்கு டிக்கெட் கவுண்ட்டர்களிலும், மற்றவர்களுக்கு ஹவுஸ்கீப்பிங்கிலும் வேலை ஒதுக்கப்படும். மக்கள் நேரடியாக அவர்களுடன் உரையாடுவதன் மூலம் மட்டுமே மூன்றாம் பாலின சமூகத்தின் மீதான கண்ணோட்டம் மாறும்” என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top