பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உதவி ஆட்சியராக நியமனம்; சட்டத் திருத்தம் ஆந்திர அரசு நிறைவேற்றியது

 

PVS

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.3 கோடி பரிசளித்த ஆந்திர அரசு குரூப்-1 பிரிவில் அவர் விரும்பும் வேலையை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித் தது.

பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவரை உதவி ஆட்சியராக நியமிக்கும் சட்டத் திருத்தத்தை ஆந்திர அரசு நேற்று நிறைவேற்றியது

அரசு வேலையை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்தி ருந்தது.இந்நிலையில் ஆந்திர அரசு அளிப்பதாக கூறியுள்ள குரூப் -1 பிரிவில் துணை ஆட்சியர் வேலையை ஏற்க சிந்து விரும்புவதாக அவரது தாயார் விஜயா கூறியுள்ளார். சிந்து தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை தேடி கொடுத்தார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. விரைவில் அவர் உதவி ஆட்சியராக பணியமர்த்தப்படுவார்’’ என்றார்.

பின்னர் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘‘மாநில அரசு விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.என்றார்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top