இனப்படுகொலைக்கு நீதி கேட்டு சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சி போராட்டம்

 

t.vidiyal-2

 

மே மாதம் இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்ட மாதம் என தமிழர் விடியல் கட்சி அறிவித்து இருந்தது.

 

இனப்படுகொலை இலங்கைக்கு துணை போகும் இந்திய அரசு அலுவலகம் முற்றுகை ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மே மாதத்தினை போராட்ட மாதமாக அறிவித்த பல்வேறு போராட்டங்களை தமிழர் விடியல் கட்சி நடத்திவருகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று (15 -05 -17) இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசை கண்டித்து, இந்திய அரசு அலுவலகமான ” சாஸ்திரி பவனை ” முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

t.vidiyal-3

தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிங்கிணைப்பாளர் டைசன் தலைமையில், கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், செய்தித்தொடர்பாளர் சைலேந்தர் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

இனப்படுகொலை இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதும், இந்தியாவின் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் இனப்படுகொலைக்கு வழிவகை செய்துகொடுத்ததும், இன்றும் ஈழத்தில் இனப்படுகொலை தொடர்வதை மூடி மறைக்கும் இந்தியாவை மக்களிடம் அம்பலப்படுத்த இந்த முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

t.vidiyal-4

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

 

t.vidiyal-1

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top