பொறுப்பற்ற தமிழகரசு;தனியார் பஸ்களில் கட்டண கொள்ளை பயணிகள் அவதி

 

bus

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வெளியூர்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் மூலம் தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் பார்ப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதால் பயணிகள் அவதியடைந்தனர். பொதுமக்கள் ரயில்களில் அதிகளவில் பயணித்ததால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.தனியார் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தனியார் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுவது ஒருபுறம் இருக்க இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவையில் 25 சதவீத அரசு பேருந்துகளும், தூத்துக்குடியில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கியது. இதனால், பேருந்து நிலையங்களில், அதிகளவில் காத்திருந்த பொதுமக்கள் தனியார் ஆம்னி பேருந்துகள், சிறப்பு தனியார் பேருந்துகள் ஆட்டோக்கள், கால் டாக்ஸி ஆகிய வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நெல்லை ,மதுரை, திருச்சி கோவை, கும்பகோணம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் குடும்பத்துடன் பேருந்து நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததால் புறநகர் பேருந்து சேவை முடங்கிய நிலையில் கேரள அரசு பேருந்துகளும் குமரி மாவட்டத்துக்கு வரவில்லை. ஒரு பேருந்தில் 2 மடங்குக்கு மேலாக ஆட்களை ஏற்றியும்,அதிகமாக வசூலித்தும்  பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்களும், கோடை சுற்றுலா சென்றவர்களும் கடும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.பொதுமக்களின் துயரங்களை பற்றி கவலை படாமல் மத்திய அரசு சொல் கேட்டு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், போனசும் அளிக்காத அதிமுக அரசு பாஜக வின் கண்ணசைவில் தமிழ்நாட்டை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆட்சிக்கு சீக்கிரம் முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று மக்களின் குரல் ஓங்கி கேட்டுக்கொண்டிருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top