பரபரப்பு ஏதும் இல்லை,பெங்களூர் அணி வெற்றி

sampirathayam

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடைசி  லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. டெல்லியில் நடந்த போட்டியில், அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட பெங்களூரு -டெல்லி அணிகள் போட்டியிட்டன. இது சம்பிரதாய ஆட்டம் என்பதால் பரபரப்பு ஏதும் இல்லை.

டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், விஷ்ணு வினோத் இறங்கினார்கள். கெய்ல் அடித்து ஆடினார். விஷ்ணு வினோத் 3 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் போல்ட் ஆக, அடுத்து கேப்டன் விராட் கோலி, கெய்லுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 96 ரன்னாக உயர்ந்த போது கெய்ல் 48 ரன்னில் (38 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ‌ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெட் 2 ரன்னில் ரன்–அவுட் ஆனார்.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 58 ரன் (45 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த நிலையில் ஜாகீர்கான் பந்து வீச்சில் ‌நதீமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் கம்மின்ஸ் 2, ஜாகீர்கான், ‌நதீம் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய டெல்லி அணி 151 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் பெங்களூரு அணி ஆறுதல் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷாப் பான்ட் 45 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 32 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பெங்களூரு தரப்பில் ஹர்‌ஷல் பட்டேல், நேகி தலா 3 விக்கெட்டும், ஹெட் 2, அவேஷ்கான், ஷேன் வாட்சன் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதில் வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி கடைசி இடத்தையே பெற முடிந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top