அஜித்தின் விவேகம் டீசர் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

 

vivekam

 

 

அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த 2015-ம் வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடியது. ரூ.61 கோடி செலவில் தயாரான அந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. சிவா இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே அஜித்குமாரை வைத்து இயக்கிய ‘வீரம்’ படமும் நல்ல லாபம் பார்த்தது. இதனால், இவர்கள் கூட்டணியில் 3-வது படமும் தற்போது தயாராகி வருகிறது.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் படம் உருவாகிறது.

இது அஜித்குமாருக்கு 57-வது படம் ஆகும். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மகள் அக்‌ஷராஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பல்கேரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடந்தது. ஐதராபாத்திலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர்.

அஜித் நடித்துவரும், ‘விவேகம்’ படத்துக்கான எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. வில்லனாக விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன், பிரமாண்டமான பொருள் செலவு என, படத்தின் ஒவ்வொரு விஷயமும் முந்தைய அஜித் படங்களை மிஞ்சியதாக உள்ளது.

முதலில் சிக்ஸ் பேக், அடுத்து பனிப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் என, படத்தின் கலக்கலான ஸ்டில்கள் வெளியாகி, ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் முதல் பார்வையும், படத்தின் தலைப்பும் பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த முதல் பார்வையில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .

இந்த நிலையில் படத்தின் டீசர் நள்ளிரவு வெளியானது. ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அஜித் ரசிகர்கள் அஜித் பேசியது போல் வெளியான வசனங்களை பதிவிட்டு வருகின்றனர். டீசர் வெளியான 8 மணி நேரத்தில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்ததாக செய்திகள் கூறுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top