கோவையில் தமிழர் விடியல் கட்சி சிங்கள நிறுவனமான ‘DAMRO’ வை முற்றுகையிட்டு போராட்டம்!

 

tamil

2009 மே மாதத்தில் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை முன்னின்று நடத்திய இந்தியா,இலங்கை,அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளையும், தமிழின மக்களை காக்க தவறிய தமிழக அரசியல் கட்சிகளையும் கண்டிக்கும் விதமாக  மே மாதம் முழுவதும் தமிழினபடுகொலைக்கான  நீதிகேட்கும் போராட்டமாக  தமிழர் விடியல் கட்சி அறிவித்திருந்தது.

இனப்படுகொலையை தடுக்க தவறிய, இன்று வரை இனப்படுகொலைக்கான நீதியையும் மறுத்துவரும் ஐநா மன்றத்தையும்  தனித் தமிழீழம்  அடையும் வரை முற்றுகையிடுவோம். என்றும் அறிவித்திருந்தது

அதன் முதல் கட்டமாக, இன்று கோவையில் இனப்படுகொலை இலங்கையின் நிறுவனமான DAMRO வை அகற்ற கோரி முற்றுகையிட்டது தமிழர் விடியல் கட்சி.

தமிழனை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிறுவனமான DAMRO வை தமிழகத்தில் இருந்து அகற்றவேண்டும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் தனித்தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை ஐநா மன்றம் நடத்தும் வரை போராடுவோம் என முழக்கம் எழுப்பி DAMRO வை முற்றுகையிட்டனர்.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top