தள்ளாடும் நீதி; உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை!

 

Karnan

சென்னை ஐகோர்ட்டு  நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந் தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

தொடர்ந்து, உச்ச நீதிமன்ற ஏழு நீதிபதிகள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் அவர்களை அவமானபடுத்தி விட்டதாகவும், நீதிபதி பணிக்கு கலங்கம் கற்பித்ததாலும், நீதிபதி கர்ணன் நேற்று ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தன் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கோர்ட்டில் இந்த உத்தரவை பிறப்பித்தார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை அவர்கள் செய்துள்ளதால், இந்த தண்டனை பிறப்பிக்கப்படுவதாக அவர் கூறினார்.மேலும், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

ஏழு நீதிபதிகளும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் வெளிநாடு செல்வதற்கு விசா வழங்கக்கூடாது என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இது நீதித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன்முதலாக 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டது.இந்திய அரசுக்கு பெரும் அரசியல் அதிர்ச்சியாக இருந்தது.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது,இந்த வழக்கை தன்னிச்சையாக எடுத்து உடனடியாக நீதிபதி கர்ணனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி தம்மை காத்துக்கொண்டது.அதன்பிறகு

‘’நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை’’ விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது

ஒரு நீதிபதி சக நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டை கூறும்போது அதன் உண்மை தன்மையை ஆராய உச்சநீதிமன்றம் கமிஷன் போடலாம்,விசாரணை வைக்கலாம். மாறாக குற்றம் சொன்ன நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறுவது நீதித்துறையின் மீது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.அதுவும் அந்த நீதிபதி எந்த பின்புலமும் இல்லாத ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருப்பது கவனிக்கத்தக்கது..

இந்திய ஆளும் வர்க்க,ஜாதிய மனோபாவம் கொண்ட துறையாக நீதித்துறை இருக்கிறதோ என்கிற சந்தேகம் மக்களிடையே இருக்கிறது. இந்த வழக்கின் போக்கில் அது உறுதி செய்யப்படுவது தவிர்க்கமுடியாதது.

மேலும், நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top