காஷ்மீர் இளைஞர்களை தவறாக சித்தரிக்கும் விவாதங்களை இந்தியா கைவிட வேண்டும்;மெஹ்பூபா சையித்

 

 

kasmir

இந்திய ராணுவம் கஷ்மீர் மக்களுக்கு எதிராக இருந்தது மட்டுமல்லாமல் இப்போது காஷ்மிர் மாணவ, மாணவிகளுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்துவது ,கண்ணீர் புகை குண்டு வீசுவது பெண் என்றும் பாராமல் தாக்குவது, சின்ன குழந்தைகளின் மீது பெல்லட் குண்டுகளை வீசுவது என ஓட்டு மொத்த காஸ்மீர் மக்களுக்கு எதிரான மனித உரிமை செயலில் ஈடுபட்டு வந்ததும் ,உலக நாடுகள் அதை கண்டித்ததும் தெரிந்ததே.

 

இப்போது, புதியதாக இந்திய அரசு காஸ்மீர் மாணவ ,மாணவிகளை ஒரு பயங்கரவாத கும்பல் போல் சித்தரிக்க இந்திய ஊடகங்களை பயன்படுத்தி வருகிறது.இதை காஸ்மீர் நாட்டு முதல்வர் கண்டித்து இருக்கிறார்.

 

காஷ்மீர் இளைஞர்களை வெறும் கல்லெறி கும்பல்களாக சித்தரிக்கும் விவாதங்களை ஒளிபரப்புவதை தேசிய ஊடகங்கள் கைவிட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி சையித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இத்தகைய விவாதங்கள் காஷ்மீர் மக்களின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாக மெஹ்பூபா சுட்டிக்காட்டினார். ”காஷ்மீரில் அரசியல் குழப்பம், அமைதியின்மை 1947 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் பொதுவாக்கெடுப்பு கோரி நடந்த போராட்டங்கள் 22 ஆண்டுகளுக்கு நீடித்தது. பின்னர் அமைதி சிறிது காலம் நீடித்தது. மீண்டும் 1990 களில் அமைதி குலைந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள அனைத்து இளைஞர்களும் வன்முறையாளர்கள் கிடையாது.அனைவரும் கல்லெறியும் நபர்கள் கிடையாது. என்றார் மெஹ்பூபா.

mehbooba_

போராடும் இளைஞர்கள் கோபத்துடனும், கைவிடப்பட்ட மனத்தாங்கலிலும் உள்ளனர். சிலர் உணர்ச்சிகரமாக தூண்டப்பட்டு காணப்படுகின்றனர். என்றாலும் பல இளைஞர்கள் தேசிய அளவில் பல தேர்வுகளிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் சிறப்பாக செயலாற்றுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இன்று காணப்படும் கொந்தளிப்பு தீர்வுகாண முடியாதது என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் பல சூழ்நிலைகளை பார்த்து விட்டேன் என்றும் குறிப்பிட்டார் முதல்வர் மெஹ்பூபா.

 

கோடைக்கால தலைநகரான ஜம்முவிற்கு மெஹ்பூபா வருகை தந்த போது செய்தியாளர்களை சந்தித்து  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top