தமிழக அரசு மேலும் 500 மதுக்கடைகளை எப்போது மூடும்? உயர்நிதிமன்ற நீதிபதிகள் கேள்வி

 

dasmark

 

தமிழக அரசு அறிவித்த மேலும் 500 மதுக்கடைகள் எப்போது மூடும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

திருமுல்லைவாயல் மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில் கைதானவர்கள் பற்றிய வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் அறிக்கையில், தற்போதைய ஆளும் கட்சி மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறியிருந்தது. 500 கடைகள் ஏற்கனவே மூடப்பட்டது. அடுத்த 500 கடைகள் மூட அரசு எப்போது  உத்தரவிட போகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அரசு வக்கீல், ‘இந்த நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தில் மதுக்கடை மூடப்படாது.

மாணவர்கள் பள்ளி சீருடையில் சென்று மது பானங்களை வாங்குகின்றனர். இதனை தடுத்து அடுத்த தலைமுறையினரை மதுவில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

ஜராத், பீகார் மாநிலங்கள் போல, தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வர முடியாது? எனவே, அடுத்த கட்டமாக 500 மதுபானக் கடைகள் எப்போது மூடப்படும் என்பதை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும்,சிறை துறையிலும் சரியான தகவல் தொடர்புகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். பின்னர் திருமுல்லைவாயல் மதுக்கடைகடை எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்கள் 21 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர். இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top