மனிதஉரிமை மீறல்;இந்தோனேசிய சிறைஉடைப்பு ; 200 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றனர்

 

 

 

 

indonesiya2

 

 

இந்தோனேசியத் தீவான சுமத்ராவில்  சிறையை உடைத்து  100க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் பெக்கன்பரு நகரில் உள்ள சியலங் பங்குக் சிறையில் இந்தோனேசிய அரசு மனித உரிமை மீறலை செய்து வருகிறது .கைதிகளை பிடித்து சிறையில் அடைப்பதோடு சரி.அவர்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.சரியான சாப்பாடு ,காவல் ஏதும் இல்லாததால் .சிறைக்கைதிகள் பல இன்னல்களை சந்திக்கிறார்கள்.தங்களை காத்துக்கொள்ள எதுவும் செய்ய தயாராகிவிட்டார்கள்

பெக்கன்பரு நகரில் உள்ள சியலங் பங்குக் சிறையின் பக்க வாசல் ஒன்றின் ஊடாக பல கைதிகள் தப்பிச் செல்வதை உள்ளூர் தொலைக்காட்சி காண்பித்தது. இந்தச் சிறையில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் அது சன நெரிசலில் இருந்தது தெரியவந்து உள்ளது.

கடந்த,வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து இருந்த அறைகளில் இருந்து சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களில் பலர் திரும்ப பிடியில் அகப்பட்டு உள்ளனர்.

300 பேரை மாத்திரம் அடைத்து வைக்கக்கூடிய இந்தச் சிறையில் 1900 பேர் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு 6 காவலாளிகள் மாத்திரமே பணியில் இருந்ததாகவும் பிராந்திய சட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் சிறையில் இருப்போரை மோசமாக நடத்தியது தொலைக்காட்சி மூலம் தெரிய வந்து உள்ளது.தற்போது சிறைக்கு, நூற்றுக்கணக்கான போலிஸ்காரர்களும், இராணுவத்தினரும் காவலாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், தப்பியவர்களை தேடும் நடவடிக்கையாக நகரெங்கும் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top