‘நீட்’ தேர்வுடன் பிளஸ்–2 மதிப்பெண்ணை கணக்கிடக்கோரி வழக்கு; மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்

 

court

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணுடன், பிளஸ்–2 மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்று ஐகோர்ட்டில் டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், ‘மனுதாரர் எழுப்பியுள்ள இந்த விவகாரம், மிகப்பெரிய பிரச்சினையாகும். எனவே, இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top