அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: வெயில் கடுமை அதிகரிக்கும்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அனல்காற்றும் வீசியது.

Hot-Summer-Starts-Tomorrow-heat-wave-will--Increasing-more_SECVPF

இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த 25 நாட்களும் வெயில் கடுமை அதிகரிக்கும். அனல் காற்றும் வீசக்கூடும்.

தற்போது கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதிக்குள் கடல்காற்று புகுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது.

ஆனால் அக்னி நட் சத்திரம் தொடங்கிய பிறகு நிலப்பரப்பில் வீசும் காற்று கடல் காற்றை நிலப்பரப்புக்குள் புகாமல் தடுத்து விடும். இதனால் அனல் காற்று வீசும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றும் வீசக்கூடும்.

கரூர் பரமத்தியில் நேற்று 107 டிகிரி வெயிலும், மதுரையில் 104 டிகிரி வெயிலும், திருத்தணியில் 103 டிகிரி வெயிலும், திருச்சியில் 102 டிகிரி வெயிலும், வேலூரில் 101 டிகிரி வெயிலும், திருப்பத்தூரில் 100 டிகிரி வெயிலும், பாளையங்கோட்டையில் 99 டிகிரி வெயிலும், சென்னையில் 96 டிகிரி வெயிலும், கோவையில் 95 டிகிரி வெயிலும் கொளுத்தியது.

மேலும் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழையும் பெய்துள்ளது. ஊட்டியில் நேற்று 60 மி.மீ. மழையும், பீளமேட்டில் 50 மி.மீ. மழையும், குன்னூர், வால்பாறை, பவானி, தேன் கனிக்கோட்டை, பாப்பி ரெட்டிப்பட்டியில் 40 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

மேற்கண்ட தகவலை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top