மருத்துவ மேல்படிப்பில் 50% இடஒதுக்கீடு -இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

 

chennai

 

 

மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படியே அரசு மருத்துவர்களின் சேர்க்கை இருக்கும் என்று தீர்ப்பு கூறினார்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது. அங்கு விசாரணைகள் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கின்  தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் பின்னர்தான் இடஒதுக்கீடு கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரிய வரும்.

இந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் மேல்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்கள் 15 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், 50 சதவீத ரத்தால் கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top