ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு!

india-courtஐபிஎல் போட்டியில் நடந்த சூதாட்டம் பற்றி எந்த குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முட்கல் குழுவுக்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தீர்ப்பை உச்ச திமன்றம் ஒத்திவைத்துள்ளது.

விசாரணையின் போது, ஐசிசி தலைவராக சீனிவாசன் பதவி வகிப்பது குறித்து கருத்துத் தெரிவிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.புதிதாக விசாரணைக் குழு அமைக்க தயாராக இருப்பதாக பிசிசிஐ உச்ச நீதின்றத்தில் அறிவித்தது.

சீனிவாசன் உட்பட 13 பேர் மீதான புகார்களை முட்கல் குழு விசாரிக்க  ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதற்கு பிசிசிஐ  எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், எந்த குழு ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தை விசாரிக்கலாம் என்பது குறித்து விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top