38 மணல் குவாரிகள் மூடல்

தமிழகத்தில் காவிரி, பாலாறு, பெண்ணையாறு உள்ளிட்ட ஆற்று படுகைகளில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. அரசு நேரடியாக மணல் விற்பனை செய்யாமல் ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கி வந்தது.

இதனால் மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கிடையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற பகுதிகளில் செயல்பட்ட மணல் குவாரிகள் சில காலங்களுக்கு முன்பு மூடப்பட்டன.

இதனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டன. மணல் லாரிகள் நாள் கணக்கில் காத்திருந்து திருச்சி, கரூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து மணல் ஏற்றி வந்து விற்பனை செய்தன.

எனவே, 4 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. மணல் விலை ஏற்றத்தின் காரணமாக சென்னையில் கட்டுமான பணிகள் முடங்கின.

இந்த நிலையில் நேற்று இரவு தமிழ்நாடு முழுவதும் 38 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன. அரசு உத்தரவை தொடர்ந்து மணல் குவாரிகளில் இருந்து ஒப்பந்ததாரர்கள் வெளியேறினார்கள்.

கரூர், நாமக்கல், திருச்சி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் செயல்பட்ட இந்த குவாரிகள் மூடப்பட்டதால் மணல் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

ஏற்கனவே மணல் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது 38 குவாரிகளையும் அரசு மூடியுள்ளது. இடைத்தரகர்களாக ஒப்பந்ததாரர்கள் நடத்தி வந்த இந்த மணல் குவாரிகளை அரசு மூடியது வரவேற்கதக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top