கீழடியில் பாஜக வன்முறை வெறியாட்டம்;மத்தியமந்திரி வேடிக்கை!

02

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த தொல்லியல் ஆய்வை பார்வையிட  வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் மே பதினேழு இயக்கம், மக்கள் விடுதலை கட்சி அமைப்பினர் ஆகியோர் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம ஏற்பட்டது

 

கீழடியில் நடைபெற்ற அகழாய்வை பாதியில் நிறுத்தியதற்கும், அதன் தலைவராக பணியாற்றிய அமர்நாத்தை அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து மே பதினேழு இயக்கம் தலைமையில் பத்து தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் கருப்புக்கொடி காட்டும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

04

சமயநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ, மக்கள் விடுதலை கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் ஊர் மக்களோடும், தன்னுடைய கட்சி தொண்டர்களோடும் கீழடி சென்று அங்கு பார்வையிட வரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் கீழடியில் பணிபுரிந்த அமர்நாத்தை மீண்டும் கீழடியில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுக்க போயிருந்தார். அப்போது கீழடிக்கு மத்திய மந்திரிகளோடு வந்திருந்த தமிழிசையும் அவர்களோடு வந்திருந்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் குண்டர்களும் மக்கள் விடுதலை கட்சியின் தலைவர் முருகவேல் ராஜனை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள்.மிகவும் பொறுமையாக முருகவேல் ராஜன் நாங்கள் மந்திரியை பார்த்து மனுவை கொடுத்துவிட்டு போய்விடுவோம் எங்களை அனுமதியுங்கள் என்றார்.இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை அனுமதிக்கவில்லை மற்றும் மந்திரிகளோடு வந்திருந்த பாஜக தொண்டர்கள் ‘பாரத் மாதகி ஜே’ என்றும் ‘இரும்பு மனிதன் மோடி வாழ்க’ என்றும் கத்தினார்கள்.முருகவேல் ராஜனை பார்த்து இங்கிருந்து ஓடி விடுங்கள் என்று கத்திக்கொண்டு அங்கு கீழே கிடந்த தென்னை மட்டையை எடுத்து அடிக்க ஆரம்பித்தார்கள் இதை மந்திரியோடு வந்த போலீஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.  ஒரு நிமிடத்தில் கீழடியை பாஜக தொண்டர்கள் கலவர பூமி ஆக்கிவிட்டார்கள். முருகவேல் ராஜனோடு ஊர் மக்களையும் போலிஸ்  காவல் வேனில் ஏற்றி வெளியே அனுப்பும் போதும் போலீஸ் வேன்  என்றும் பாராமல் வேனை அடித்து நொறுக்கினார்கள்.

nirmala

மக்கள் விடுதலை கட்சியை சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க குண்டர்களை ஏன் காவல்துறை கைது செய்யவில்லை? என்று போலீசை நோக்கி மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

சட்டம், இந்துத்துவ பாசிஸ்டுகளுக்காக வளைகிறது. பாஜக குண்டர்கள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தை மற்றவர்கள் செய்திருக்கும் பட்சத்தில் அவர்களை தாக்கி கைது செய்திருக்கும் தானே! காவல்துறை. ஆனால்,இங்கு பாஜக வை சேர்ந்தவர்களை கைது செய்யாதது   தமிழக காவல்துறை பாஜக இந்துத்துவ கும்பல்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதை இந்நிகழ்ச்சி அம்பலப்படுத்துகிறது.என்று மே பதினேழு இயக்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

பாஜக வுக்கு சாதகமாக வேலை செய்யும் தமிழக போலீஸ் நடவடிக்கையை அனைத்து தமிழ் இயக்கங்களும் கண்டித்து இருக்கிறது

1

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top